top of page
Theyyam_86.jpg

கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்: தெய்யம்

Store Links

Download PDF Sample
Download Audiobook Sample

'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்' மறக்கப்பட்ட கலாச்சாரத்தையும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களையும் நினைவூட்டுகிறது. தெய்யம் என்பது இந்திய மாநிலமான, கடவுளின் சொந்த தேசம் எனப்போற்றப்படும் கேரளாவின் திராவிட சடங்குடன் இணைந்த கலை வடிவம். அழகிய படங்களோடும் , நூற்றுக்கணக்கான கதைகளோடும் தெய்யம் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகிறது. "மக்களின், மக்களால், மக்களுக்காக" என்பதற்கேற்ப, உண்மையான கடவுள்களான தெய்யம் கலைஞர்களுக்கு இந்நூலை சமர்ப் பிக்கிறோம்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இருபது நாடுகளிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தனது நிர்வாக ஆலோசனை மற் றும் தன்னார்வப் பணி நிமித்தம் பயணித்தபோது தனது கேமரா மூலம் ஒளியைத் துரத்தி செல்லும் அற்புதமான நல்வாய்ப்பு நூலாசிரியருக்கு கிடைத்தது. என்ன இருந்தாலும் ஒரே பருவத்தில் 500 க்கும் மேற்பட்ட கடவுள்கள் பூமியில் இறங்கும் இடத்தை அவர் அதுவரை பார்த்ததில்லை. யுனெஸ்கோவின் உலகப் பாரம் பரியச் சின்னமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் அரபிக்கடலுக் கும் இடையில் இயற்கையான பசுமை விரிந்த, வட மலபாரின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில், இறைவனே கைவிட்ட பக்தர்களை தெய்யக்கடவுள் அரவ ணைப்பதற்காக பலருக்கும் தெரியாத பிரபலமாக இல்லாத பாதைகள் திறக் கின்றன. ஒரு குன்றின் மீது பிரகாசிக்கும் நகரமாக மலபார் மூலையை மாற்றி யதற்கு அந்தத் தெய்யம் கடவுள்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஆடை வடிவமைப்பாளர்களாகவும் , ஓவியர்களாகவும், இசைக்கலைஞர்களாக வும், கைவினைஞர்களாகவும், டிரம்மர்களாகவும் நடன அமைப்பாளர்களாகவும் கூட தெய்யம் கடவுள்கள் பிரகாசிக்கின்றனர். மானுட வர்க்கத்தைத் தாண்டிய மாய உருவாக வளர்ந்து, எரிதழலையும் பொறுத்துக்கொண்டு அதன் ஊடாக அதிக ஆடைகளை சிரமமின்றி சுமந்து கொண்டு செல்கின்றனர் ,’கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்’!

கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் மலபார் குன்றுகளின் மீதுள்ள ஜொலி ஜொலிக்கும் நகரங்களின் சடங்கு நடனமான தெய்யத்தின் ஆழமான வரலாற் றையும் வியக்க வைக்கும் பன்முகத்தன்மையையும், கதைசொல்லலின் வசீக ரிக்கும் பரிமாணங்களையும் காட்டி இந்த 'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்',உங்களை ஒரு சூறாவளி சுற்றுலா அழைத்துச் செல்கிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான, மனம் மயக்கும் 101 தெய்யம் கதைகளை உள்ளடக்கும் கடினமான பணியில் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஈடுபட்டுள் ளது. மிசிசிப்பி டெல்டாவில் உள்ள, குரலும் இசைக்கருவிகளும் இணைந்த ப்ளூஸ் இசை வடிவத்தைப் போலவே , பாடல் மற்றும் நடனத்தைப் பயன்படுத்தி, 5000 ஆண்டுகள் பழமையான வர்ணாசிரம சாதி அமைப்பின் கீழ் அழுத்தப்பட்டிருக்கும் கடவுளின் சொந்த தேசத்தின் பூர்வீகக் குடிகளான திராவிட மக்களின் சோகத்தை ‘தோற்றம்’ மற்றும் ‘தெய்யம்’வெளிப்படுத்துகின்றன. வலிமைமிக்க, அநீதியான அமைப்புகளுக்கு எதிரான உண்மையான தெய்வீகக் கிளர்ச்சியின் கதைகளும் கலைகளும் நம் இதயங்க ளைத் தொட்டு உசுப்புகிறது.

Digital
Print
Audio

Amazon

Digital
Print
Audio
Digital
Digital
Digital
Print
Print
Print
Audio
Audio
Audio

Apple

Google

Kobo

B&N

Translator

Venkateswaran Subramanian

Audiobook Narrator

Rajesh

bottom of page